அப்பப்பா! போதும்போதும்னு ஆயிடுது உன்னன்டெ மாட்டிட்டா.... இது என்ன கன்னமா பச்சரிசி மாங்காயா? முகத்தைப் பாரு சாமியாரு மாதிரி...! தா! ரொம்ப விளையாடாதே, வெட்கமா இருக்கு... சிரிப்பு பகீல்னு வருது... இந்தா அந்தா பக்கம் சோளக் கொல்லையிலேதான் சொக்கப்பன் இருக்கறான்... அவன் காதிலே நான் சிரிக்கிறது விழுந்தது, அவ்வளவுதான், வீட்டுக்கு வந்து கலகத்தை மூட்டி விட்டுத்தான் தூங்கப் போவான்...
உன்னை நம்பாமெ நான் வேற யாரை நம்புவேன். என் மனசிலே அந்த நம்பிக்கை இல்லைõயானா, இப்படி உங்கூடப் பழகுவனா. பேசுவனா... ஆனா, 'எதுக்கும் ஆகவேண்டிய காரியத்தைக் காலகாலத்திலே முடிச்சுட வேணும்டி, ஆம் பிள்ளைக மனசு ஒரு வேளைபோல மறுவேளை இருக்காது... எந்தப் பாவிமகனாவது,